பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்த கரிசனைகளை தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் தலைமைப்பயிற்றுவிப்பாளர் சனத்ஜெயசூரியா ஆகியோரை தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாக்கிஸ்தானுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொண்ட அதேவேளை இலங்கை அணியினரை தொடர்ந்தும் பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டார் .
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பாக்கிஸ்தான் அதிகாரிகளை தொடர்புகொண்டார்,இதனை தொடர்ந்து அணியின் பாதுகாப்பு மேலும்பலப்படுத்தப்பட்டுள்ளது, அணி தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்றிரவு சந்தித்துள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் அவர்களின் பாதுகாப்பு கரிசனைகளை கேட்டறிந்து உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
