பொலிஸார் பல முறை எச்சரித்துள்ள நிலையிலும் இணையவழி உடனடி கடன் வழங்கும் நிறுவனங்களின் மோசடிகளிற்கு பலர் பலியாகும் கதை தொடர்கின்றது
ஒன்லைன் கடன் செயலி மூலம் பெற்ற பணத்திற்கு வட்டி கட்ட முடியாததாலும் அந்த நிறுவனத்தின் துன்புறுத்தல்களாலும் மனமுடைந்த மருத்துவ தாதியொருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்
அவர் ஒரு செயலி மூலம் ரூ. 10000 என்ற சிறிய தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால்இ “மீற்றர் வட்டி” என்ற கொடூரப் பொறியில் அவர் சிக்கியுள்ளார்.
பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டபோது அந்தச் சட்டவிரோத யுpp நிறுவனம் மிகக் கேவலமான வழிகளில் மிரட்டத் தொடங்கியுள்ளது:
அவரது தொலைபேசியில் இருந்த அனைத்து நண்பர்கள் உறவினர்களின் எண்களுக்கும் அவதூறான செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அவரது புகைப்படங்களை மார்பிங்செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் சமூக அவமானத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ‘ இணையவழி உடனடி கடன் வழங்கும் நிறுவன!’ என்பவை வங்கிகள் அல்ல. அவை ஆபத்தான குற்றப் பொறிகள்!
. தகவல் திருட்டு: 2. கொடூர வட்டி: 100 வீதம்முதல் 500 வீதம்வரை வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.
3. மிரட்டல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வைத்தே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மிரட்டுகிறார்கள்.
நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் சிக்கியிருந்தால் என்ன செய்வது?
1. பயப்படாதீர்கள்: மிரட்டலுக்குப் பயந்து மேலும் பணம் கட்ட வேண்டாம்.
2. புகார் அளியுங்கள்: உடனடியாக உங்கள் பகுதி காவல்துறை அல்லது குற்றப் புலனாய்வுத் துறையில் (கார் அளியுங்கள்.
3. உண்மையைச் சொல்லுங்கள்: உங்கள் நண்பர்களுக்கு இதுபோல அழைப்புகள் வந்தால் நீங்கள் ஒரு ‘சைபர்’ குற்றத்தில் சிக்கியுள்ளீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
