வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர் ஆளுநரை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இலங்கையின் சில மாகாணங்களில் ஏற்கனவே மாகாண மட்டத்திலான நூலக சேவைகள் பணியகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் மாவட்ட மட்டமும், பிரதேச செயலக மட்டமும் சார்ந்த நூலக சேவைகள் பணியகங்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று மாகாண பொதுநூலகம் மற்றும் மாவட்ட பொதுநூலகங்களும் இதன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன எனவும் ஆளுநருக்கு விளக்கினர்.

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் உருவாக்கப்படும் என்ற யோசனையை ஆளுநர் வரவேற்று, அதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இலத்திரனியல் நூலக சேவைகளை விரிவுபடுத்தவும், அதற்கான பயிற்சிகளை வழங்கவும் தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார்.

அதேவேளை, புத்தக வெளியீட்டுக்கான உதவிகளைக் கோரி வடக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்கள் குறைவாக உள்ளன என்ற தகவலை தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபை முன்வைத்தது. இதற்கு பதிலளித்த ஆளுநர், உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்