இலங்கையை சேர்ந்த 38வயது நபர் ஒருவர் இஸ்ரேலில் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்களையும் அச்சத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
தரிந்து சானக என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இ;வ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இந்த கொலை இடம்பெற்றதாகவும் சந்தேகநபர் அமெரிக்காவை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரிந்து கட்டுமானதொழில்துறையில் தச்சுவேலைக்காக இஸ்ரேல் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குடும்பத்தினருக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்ற ஒருவரின் மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் சில வாரங்களிற்கு முன்னர் இலங்கையர்கள் இரசாயனம் கலந்த திரவ தாக்குதலிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.