இந்திய இலங்கை கைவினை மற்றும் கலாச்சார விழாவினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நேற்று கொழும்பு ஹவ்லக் சிட்டி மோலில் திறந்து வைத்தார்.
இலங்கை தேசிய கைவினை பேரவை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் இணைந்து இந்த கைவினை மற்றும் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்துள்ளன .

ஆரம்ப நிகழ்வில் வர்த்தக சமூகத்தினர் தொழில் முனைவோர் உட்பட கலந்துகொண்டனர்.
அமைச்சர் சுனில்ஹந்துநெத்தியும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.
பாரத்ஸ்ரீலங்கா மைத்திரி உற்சவ் 2024 இல் கிடைத்த வெற்றியை அடித்தளமாக கொண்டு கைவினை கலாச்சார விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்கைவினைத் தொழில் பாரம்பரிய வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில் கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது என தெரிவித்தார்

இந்த விழாவில் குஜராத்தின் அஜ்ராக் பிளாக் பிரிண்டிங் மற்றும் பூஜோடி ராஜஸ்தானின் டை ரூ டை மற்றும் அரக்கு வளையல்கள் காஷ்மீரின் சால்வைகள் டெல்லியின் பெண்கள் தலைமையிலான கைவினைப்பொருட்கள் ஹரியானாவின் தொடர்ச்சி போன்ற பல்வேறு மரபுகஎன இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20 கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.


இலங்கை கைவினைஞர்கள் பட்டிக் தோல் கைவினைப்பொருட்கள் ரத்தினக் கற்கள் மற்றும் அலங்கார கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட தங்கள் தனித்துவமான படைப்புகளையும் காட்சிப்படுத்துகின்றனர் இது பார்வையாளர்களுக்கு இலங்கைதீவின் கலை பாரம்பரியத்தைப் பற்றிய உண்மையான பார்வையை வழங்குகிறது.
