சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் 250 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்தை வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு 09 ஐச் சேர்ந்த 33 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் தொடங்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில்இ மஹர பகுதியைச் சேர்ந்த அந்த நபர்இ சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி நிலத்தை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.சந்தேக நபர் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் கொழும்பு 09 இல் உள்ள ஆராமயா வீதியில் வசிக்கும் 33 வயதுடையவர்.
மேலும் சந்தேக நபரின் பெயரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன மேலும் பணமோசடி சட்டத்தின்படி 07 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
