செயற்கை தொழில்நுட்பம் தொழில்களை மாற்றீடு செய்யாது மாறாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்துள்ள 99எக்சின் ஸ்தாபகர் மனோசேகரம் செயற்கை தொழில்நுட்பம் தொழிலாளர்களை புத்திசாலித்தனமாகவும்,திறமையாகவும்,ஆக்கபூர்வமாகவும் பணியாற்ற கட்டாயப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
ஏஜென்டிரி ஏஐயினை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ள அவர்செயற்கை தொழில்நுட்ப புரட்சிபோன்ற ஒன்று நிகழும் போது தொழிலாளர்கள் வேலை பறிபோகுமோ என அச்சப்படக்கூடாது மாறாக முன்பை விட புத்திசாலித்தனமாவும் உற்பத்திரீதியாகவும் வேலை செய்ய உதவும் புரட்சியின் உற்பத்தி பக்கத்தை பார்க்க வேண்டும்; என அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை தொழில்நுட்பம் வேலைகளை கொண்டுபோய்விடும் என தெரிவிப்பது உண்மையல்ல
எனமனோசேகரம் தெரிவித்துள்ளார்.
வேலைகள் இருந்தாலும் பல வருடங்களாக பழையதையே செய்து கொண்டிருந்தாலும்செயற்கை தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் தொழிலை முன்னேற்றிக் கொள்ளாமல் யாரும் மெத்தனமாக இருக்க முடியாது. செயற்கை தொழில்நுட்பம் தொழில்நுட்பம் உலகையே ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றுள்ளது. நீங்கள் பெயரிடும் ஒவ்வொரு துறையிலும்எனமனோசேகரம் தெரிவித்துள்ளார்.
