வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய நபர் கைது

வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய நபர் திருக்கோவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்
வெளிநாட்டு பெண்சுற்றுலாப்பயணியிடம் ஆபாசமான முறையில் இவர் நடந்துகொள்வதை காண்பிக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணியாக வந்த நியுசிலாந்து பிரஜை முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பெண்சுற்றுலாப்பயணி அறுகம்குடாவிலிருந்து பாசிக்குடாவை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பெண்சுற்றுலாப்பயணியொருவர் நபர் ஒருவர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலிற்கு உள்ளாவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தி செல்லும் பெண் சுற்றுலாப்பயணி முச்சக்கரவண்டியை நிறுத்தியவேளை நபர் ஒருவரை எதிர்கொள்வதையும் அவ்வேளை அந்த நபர் அநாகரீகமான விதத்தில் நடந்துகொள்வதையும் வீடியோ காண்பித்துள்ளது.
பெண் சுற்றுலாப்பயணி இது குறித்து அதிர்ச்சியும் அச்சமும் வெளியிடுகின்றார்.
இலங்கை அன்பான மக்கள் காணப்படும் அழகான நாடுஇஆனால் திடீர் என இது நடந்துள்ளதுஇ இனி இலங்கையில் இருக்கும் எஞ்சிய நாட்கள் முழுவதும் நான் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அச்சத்துடன் இருக்கப்போகின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது