சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பதற்கான கடும் விதிமுறைகள் அவசியம் என சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலாத்துறை முயற்சியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்கு எதிரான துன்புறுத்தல்கள் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்கு எதிரான துன்புறுத்தல்களை கண்காணிப்பதற்கு அவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அரசகட்டமைப்பொன்று தற்போது நாட்டில் இல்லை என சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலாத்துறை முயற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற பல சம்பவங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளன என தெரிவித்துள்ள அவர் சில நாட்களிற்கு முன்னர் வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணி துன்புறுத்தப்பட்ட சம்பவம் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு விடயத்தில் காணப்படும் வெற்றிடத்தை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இளைஞரின் நடத்தை இலங்கை பெண் சுற்றுலாப்பயணிகளிற்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்ற கேள்வியை எழுப்புகின்றது,இது குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
