வவுனியாவின் மாற்றுதிறனாளிகளான பெண்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டமொன்றை ஓர்கன் மற்றும் சிஎவ்எல்ஐ ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கின்றன.
திறனைவளர்ப்பதற்கான பயிற்சிகள் வியாபார வர்த்தக முயற்சிகளில் ஆதரவைவழங்குதல்,வாழ்வாதார திட்டங்கள் மூலம் வவுனியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 20 பெண்களை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அவர்கள் தங்கள் சொந்த வருமானத்தை உழைப்பதன் மூலம் குடும்பத்தின் பொறுப்புகளை கவனித்துக்கொள்வதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கைகள்
உள்ளுராட்சி அமைப்புகளிற்கு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தல்
மாற்றுதிறனாளிகளான 20 பெண்களை தெரிவு செய்தல்
யோசனைகளை கருத்துக்களை பரிமாறுவதற்காக வலையமைப்புகளை கூட்டங்களை நடத்துதல்
வர்த்தக முயற்சிக்கான திட்டமிடல் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல்
அவர்களது உற்பத்திகளை இணையம் மூலம் ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திறனை வளர்த்தல்

கற்றுக்கொள்வதற்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் மட்டக்களப்பிற்கான விஜயம்
வர்த்தக கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல்
அவர்களின் சிறுவர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான ஆதரவை வழங்குதல்
பலாபலன்
உடனடி பலாபலன்
மாற்றுதிறனாளிகளான 20 பெண்கள் வர்த்தகம் சந்தைப்படுத்தல் உத்திகளை அறிந்துகொள்வார்கள்
