சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவேகமாக அதிகரிக்கும் காலம் நெருங்கியுள்ள நிலையில் வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அரசாங்கம்; பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும்,சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும்,சுற்றுலாப்பயணிகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
