திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளின் அடாவடி தொடர்கிறது என்கிறார் – ரவிகரன் எம்.பி

ஈழத்தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளின் தொடர்சியாகவே திருகோணமலையில் இடம்பெற்ற புத்தர்சிலை அமைக்கும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றில் 17.11.2025இன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நீதி அமைச்சின்மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
போருக்குப் பிறகான காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு துறைகள் தோறும் கிட்டாத ஒரு விடயத்திலான விவாதத்திலே தான் இன்று நாமெல்லாம் கலந்துகொண்டிருக்கிறோம்.
வென்றவன் பக்கமே வரலாறு சாயும் என்பதையும் வெல்பவன் சொல்வதே வரலாறாகும் என்பதையும் இனவாதம் பழுத்துப்போயுள்ள மாறிவரும் அரசுகளின் செயல்கள் காட்டுகின்றன.
முல்லைத்தீவில் குருந்தூர் மலை, நெடுங்கேணியில் வெடுக்குநாறி மலை, யாழ்ப்பாணத்தில் தையிட்டி, நேற்று திருகோணமலையில் சிறி சம்புத்த ஜயந்தி போதிவர்த்தன விகாரை. ஈழத்தமிழர்களின் பூர்வீக இடமெல்லாம் சட்டம் மௌனிக்க, அரச இயந்திரங்கள் காவல் காக்க, தமிழர்களை அடித்தும் அச்சுறுத்தியும் தடுத்தும் அறத்தைக் கொன்று விகாரைகள் எழும்புகின்றன.
பேரினவாத அடக்குமுறைக்குள் தமிழர்களுக்கு கிட்டாத ஒன்றைப் பற்றிய விவாதத்திலே இன்று கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் மக்களின்சார்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் இத்தகைய நீதிக்குப் புறம்மான பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து