வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும் -இலங்கைக்கான வியட்நாம் தூதுவர்

வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர்இ வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினரை  திங்கட்கிழமை மாலை (17.11.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன் போருக்குப் பின்னர் வியட்நாம் வேகமாக மீண்டு வளர்ச்சி பெற்ற அனுபவங்கள் வடக்குக்கு பயனுள்ளதாக இருக்கும். போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆனபோதிலும் வடக்கில் பெருமளவிலான தொழிற்சாலைகள் உருவாகவில்லை. விவசாயிகள் மீனவர்கள் தங்கள் மூல உற்பத்திகளை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர்.

அதற்குத் தேவையான தொழிற்சாலைகள் அவசியம். கிராமப்புற உட்கட்டமைப்பு இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் சுற்றுலாத்துறைக்கு மாகாணம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இந்தத் துறை இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு மாகாணத்தின் புள்ளிவிவரங்கள் துறை ரீதியான சவால்கள் தேவைப்பாடுகள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தூதுவர் ட்ரின் தி தாம் வியட்நாம் ஏற்றுமதி நோக்கிலான விவசாயத்தில் வலுவாக செயல்படுகிறது. அந்த அனுபவங்களை வடக்குடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஏனைய தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர முடியும். வடக்கு மாகாண அதிகாரிகளை வியட்நாமுக்கு அழைத்து எங்கள் அனுபவங்களைப் பகிரலாம். நீங்கள் முன்வைத்த முதலீட்டு வாய்ப்புகளை வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பேன்;. அவர்களை வடக்கில் முதலீடு செய்ய ஊக்குவிப்பேன்.

அதிக எண்ணிக்கையிலான வியட்நாமியர்கள் தற்போது இலங்கைக்கு பயணம் செய்கின்றனர். வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மையங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி இங்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.


அத்தோடு முதலீட்டாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவார்கள். எனவே கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்ளூர் விமான சேவை மேலும் வினைத்திறன் பெறுவது அவசியம். வியட்நாமின் மாநிலங்களுடன் வடக்கு மாகாணமும் நேரடி ஒத்துழைப்புக் கட்டமைப்புகளை உருவாக்க விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்