ரஸ்யாவிற்கு எதிரான தடைகள் அதிகரித்து வருகின்ற போதிலும் இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகளின் மீள்எழுச்சி தன்மையை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்லெவன் ஜாகார்யன் பாராட்டியுள்ளார்
இருநாடுகளிற்கும் இடையில் சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகளில் வலுவான உறவுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த வருடம் 640 மில்லியன் டொலராக காணப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்இஇலங்கை தேயிலை ரஸ்ய கடைகளில் பெருமளவு வரவேற்பு பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தேயிலை ரஸ்யாவில் மிகவும் பிரபலமானது என தெரிவித்துள்ள அவர் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பும் இடங்களில் ஒன்றாக இலங்கை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் முதலாம் திகதி மொஸ்கோவிலிருந்து நேரடி விமானசேவை மத்தல விமானநிலையத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள ரஸ்ய தூதுவர் பெருமளவு ரஸ்யர்கள் இலங்கைக்கு வருவதை நீங்கள் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேற்குலகின் தடைகள் சட்டவிரோதமானவை பயனற்றவை என தெரிவித்துள்ள இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் தடைகள் ரஸ்யாவின் வெளிவிவகார கொள்கையிலோ அல்லது விசேட இராணுவநடவடிக்கையிலோ எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்தரப்பு எங்கள் கோரிக்கைகளை இணங்கும் வரை நாங்கள் எங்கள் இராணுவநடவடிக்கையை தொடர்வோம் என தெரிவித்துள்ள தூதுவர் தடைகள் வெற்றியளிக்காதவைஇசீனா இந்தியா ஈரான் போன்ற நாடுகளுடன் பாரம்பரிய நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்வதன் மூலம் ரஸ்யா இந்த தடைகளை வெற்றிகரமாக எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ளார்.