இலங்கையின் கடன்நெருக்கடிக்கு பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட– அரசாங்கங்கள் இடையிலான -போட்டித்தன்மையற்ற உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களே காரணம் என தெரிவித்துள்ள லண்டனின் பொருளியல் நிபுணர்கள் அதானி காற்றாலை மின்உற்பத்தி திட்;டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளனர்.
பேரினப்பொருளியலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட பலவருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இடையிலான உள்கட்டமைப்பினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் தற்போது கைவிடப்பட்டுள்ள அதானியின் 250 மெகாவாட் திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது இலங்கை அரசாங்கத்தின் பெறுதலுடன் தொடர்புபட்ட நிர்வாக தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் அதானியின் காற்றாலை மின் திட்டத்தி;ற்கான கட்டணத்தை விட இலங்கைக்கு முன்மொழியப்பட்ட கட்டணம் 120 வீதம் அதிகம் என லண்டனின் எஸ்ஓஏஎஸ் பல்கலைகழக சர்வதேச பொருளியல் பேராசிரியர் பல்லவி ராய் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் குறிப்பிடத்தக்க காற்றாலை வளம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப அடிப்படையில் நாங்கள் இலங்கைக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் இது நேர்மாறானதாக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.