நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 52 வீத பங்களிப்பை வழங்கும்,4.5 மில்லியன் மக்களிற்கு வேலைவாய்பபை வழங்கும் 1.1 மில்லியன் சிறிய நடுத்தர தொழில்முனைவோர் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடி காலத்தில் 260,000 வர்த்தகங்கள் வீழ்ச்சியை சந்தித்தன கடந்த இரண்டு வருடங்களில் மேலும் 150,000வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த தொழில்முனைவோருக்கு உரிய கடன் மறுசீரமைப்பு பொறிமுறையை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு யதார்த்தபூர்வமான தீர்வுகளை முன்வைக்காமல் அரசாங்கம் வெறுமனே விவாதத்தில் ஈடுபடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.