கூட்டுறவுத் துறையின் பிரச்சினைகள் குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் ஆளுநர்கள் உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

கூட்டுறவுத் துறையின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆளுநர்கள், மாகாணக் கூட்டுறவு அமைச்சின் செயலாளர்கள், மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஒரு விசேட கூட்டமொன்று 19.11.2025 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள், அனைத்துப் பாவனையாளர் சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் ‘கோப் சிட்டி’ (Co-op City) நிலையங்களை அனைத்து நகரங்களிலும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கூட்டுறவு உற்பத்திப் பொருட்களை ஒருமித்த வணிகநாமத்தின் கீழ் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதுடன், பிராந்திய விற்பனை நிலையங்களை மினி கோப் சிட்டியாக (Mini Co-op City) மாற்றி கிராமிய மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கௌரவ அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய நிலைமை, அவற்றில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கூட்டுறவுச் சங்கங்களில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வுப் பிரிவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் பதவி வகிக்கும் காலத்தை திருத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அதற்கமைய, கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பதவி வகிக்கும் காலங்களுக்குச் சில எல்லைகளை விதிப்பதன் மூலம் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.

ஒருசில கூட்டுறவுச் சங்கங்களில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கு அதிக வட்டி அறவிடுதல், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களை பதிவுக் குறிக்கோளிலிருந்து விலகி தனிப்பட்ட வர்த்தகங்களாக நடாத்திச் செல்லுதல், மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் காணிகள் மற்றும் சொத்துக்களை வேறு நபர்களால் கையகப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து, அவற்றின் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பல விசேட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார். இதன்போது முக்கிய நகரங்களில் ஸ்தாபிக்கப்பட எதிர்பார்க்கப்படும் கோப் சிட்டி (Co-op City) நிலையங்கள் மூலம் கூட்டுறவு உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான கடன் உதவிகளை வழங்குவதில் கூட்டுறவு அபிவிருத்தி நிதியம் மூலம் கூப் சிட்டியை மேம்படுத்துவதற்குத் தேவையான கடன் வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவான கூட்டுறவுப் பிரகடனம் ஒன்றையும், அனைத்து மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுக்களுக்கும் பொதுவான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்