ரணில்விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் – லண்டனில் 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் லண்டனிற்கு பல்கலைகழக நிகழ்வொன்றிற்காக சென்றமை குறித்த விசாரணைகளிற்காகபிரிட்டன் சென்றிருந்த சிஐடி குழுவினர் 50 பேரிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்;துள்ளனர்.
சிஐடி குழுவினர் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரக அதிகாரிகள் நால்வரிடம் வாக்குமூலத்தினை பெற்ற பின்னர் இந்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் குழுவினர் சட்டமா அதிபர் ரணில்விக்கிரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக சட்டமா அதிபர் பரிந்து ரணசிங்கவை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

சிஐடி குழுவினர் இந்த வாரம் இலங்கை திரும்பியதும் மேலும் தெளிவான பதிலை அளிக்க முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் 90 வீதம் பூர்த்தியாகிவிட்டதாக தெரிவித்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் விசாரணைகள் முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் குற்றத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குவோல்வர்ஹம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுத் துறை குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் இன்றி அவர்களிற்கு தெரியப்படுத்தாமல் குற்றப்புலனாய்வு திணைக்க அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
.
சிஐடி குழுவினரின் விஜயம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.சிஐடியினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து எந்த அறிவுறுத்தல்களையும் கோரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதிபொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழு இந்த வார ஆரம்பத்தில் லண்டன் புறப்பட்டு சென்றது
சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளான
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்ஆகியோருக்கு
ஒரு குற்றப் புலனாய்வுப் பிரிவு இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவது குறித்து தெரியாது என்று சட்டமா அதிபர் திணைக்கவட்டாரங்கள் தெரிவித்தன. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் இந்தக் குழுவை சுயாதீனமாக அனுப்ப சிஐடி முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை இங்கிலாந்திற்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் சிஐடி குழு வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. 2023 செப்டம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து சென்றவேளை ​​சிறிசேனா இங்கிலாந்துக்கான உயர் ஸ்தானிகராக இருந்தார். அங்கு அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது.

இங்கிலாந்தில் வசிக்கும்  சிறிசேன லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனிற்கான இரண்டு நாள் விஜயத்தின் போது அரசநிதியில் 16.6 மில்லியனை செலவிட்டார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இது அவரது தனிப்பட்ட விஜயம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை