இலங்கை மத்திய வங்கி தனது இலச்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய வங்கி ஏமாற்றுபேர்வழிகள் தனது இலச்சினையை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான போலி வர்த்தக முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.

போலியான முதலீட்டு திட்டங்கள் உட்பட பல வித நிதி மோசடிகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
