ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியபிரதமர் மோடி உரை

செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ‘அனைவருக்கும் நியாயமான நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும்இ குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயன்பாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உயர் செயல்திறன் கொண்ட கணினி திறன் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களை கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை மனித மேற்பார்வை பாதுகாப்பு தவறான பயன்பாட்டைத் தடுப்பது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவானது மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும். இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும். ‘அனைவரின் நலன் அனைவரின் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் 2026 பிப்ரவரியில் இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த முயற்சியில் அனைத்து ஜி20 நாடுகளும் இணைய அழைக்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்ற வகையில் நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. புதுடெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் திறன் பரிமாற்றம் குறித்து பேசப்பட்டது. வரும் ஆண்டுகளில் திறன் பரிமாற்றம் குறித்த உலகளாவிய கட்டமைப்புக் குழுவை உருவாக்க வேண்டும். நிலையான வளர்ச்சி நம்பகமான வர்த்தகம் அனைவருக்கும் செழிப்பு ஆகியவற்றுடன் உலகளாவிய நல்வாழ்வில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்