2025ம் ஆண்டில் இதுவரை 200,000 புதிதாகவரி செலுத்துவோர் பதிவாகியுள்ளனர் என உள்நாட்டு இறைவரிதிணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 1.2 மில்லியனாக உயர்த்தியுள்ளது. இது நாட்டின் வரி நிர்வாகம் மற்றும் இணக்க முயற்சிகளில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியசிரேஸ்ட பிரதி ஆணையாளர் பி. நந்தன குமார வருவாய் தொடர்ந்து வலுவான மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் திணைக்களம் 18000 புதிய நிறுவனப் பதிவுகளையும் பதிவு செய்துள்ளது இது வணிக நடவடிக்கைகளின் முறைப்படுத்தலை அதிகரிப்பதைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“சமீபத்திய பதிவுகளுடன் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இப்போது 1.2 மில்லியனை எட்டியுள்ளது அதே நேரத்தில் கலால் வரி பதிவுகள் 30000 ஆக உயர்ந்துள்ளன” என்று அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் ரூ. 1025 பில்லியனாக இருந்த வரி வருவாய் 2020 ஆம் ஆண்டில் ரூ. 523 பில்லியனாகக் கடுமையாகக் குறைந்து 2021 ஆம் ஆண்டில் ரூ. 632 பில்லியனாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கணிசமாக வலுவடைந்து 2022 ஆம் ஆண்டில் ரூ. 1058 பில்லியனாகவும் 2023 ஆம் ஆண்டில் ரூ. 1842 பில்லியனாகவும் உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டிலும் இந்த வேகம் தொடர்ந்து ரூ. 2620 பில்லியனாக உயர்ந்தது மேலும் 2025 ஆம் ஆண்டு இலக்கையும் அடைய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.