கொழும்பு விமானநிலையத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் புதிய முனையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 2026ம் ஆண்டு ஆரம்பிக்கப்படலாம்-அமைச்சர் அருண கருணாதிலக

கொழும்பு விமானநிலையத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் புதிய முனையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 2026ம் ஆண்டு ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக துறைமுக சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது அதன் கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கி வருகிறது. இலங்கை தனது கடன்களை உரிய காலத்தில் செலுத்த தவறியதாலும் பல காரணங்களால் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணி தாமதமானது.

ஒப்பந்ததாரர்களின் தொழில்நுட்ப மதிப்பீடு இப்போது நிறைவடைந்துவிட்டது “நாங்கள் ஜனவரி மாதத்திற்குள் விலைப்புள்ளிகளைத் திறக்க முடியும் என்று நினைக்கிறோம்” “எனவே ஜூன் – ஜூலை 2026-க்குள் ஒப்பந்தத்தை வழங்கி கட்டுமானத்தைத் தொடங்க நாங்கள் நம்புகிறோம்.”

இலங்கை தனது கடன்களை உரிய காலத்தில் செலுத்த தவறியபோது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அதன் விதிகளின் கீழ் கடனை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதால் முந்தைய ஒப்பந்ததாரர் துணை அமைப்பைக் கட்டிய பிறகு பணியை நிறுத்தினார். இருப்பினும் விமான நிலையத்திற்குச் சொந்தமாகக் கடனைச் செலுத்தும் திறன் உள்ளது.

முனையம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமான நிலையம் இப்போது கடுமையான நெரிசலை எதிர்கொள்கிறது.”ஒரு தற்காலிக நடவடிக்கையாக தனியார் துறையின் ஆதரவுடன் 14 சோதனை நுழைவாயில்களை ( திறந்தோம்”

“இதன் விளைவாக நாங்கள் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 20 கூடுதல் விமானங்களுக்கு இடமளிக்க முடியும்.”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்