காலிதுறைமுகத்தினை சுற்றுலாமையமாக மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களை அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் விவகார அமைச்சர்,gall அனுரகருணதிலக தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஆர்வத்தை பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாமையமாக காலிதுறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்திவருகின்றோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல முதலீட்டாளர்கள் தங்கள் ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் மற்றும் உல்லாசப்பயண படகுகளிற்கான மையமாக காலிதுறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து நீண்டகாலமாக கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் இதுவரையில் அதனை நோக்கிய உறுதியான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
