கிளிநொச்சி, வட்டக்கச்சி புழுதியாற்று குளத்தின் கட்டு வெட்டி விட உள்ளதால் புழுதியாற்றங்கரை குடியிருப்பாளர்கள் அவதானம்என நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இரணைமடு நீரேந்து பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சியால் பல சிறு குளங்கள் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதால் இரணைமடுவிற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இரணைமடுவின் வான் கதவுகளால் நீர் வெளியேற்ற இயலாத நிலை உருவாகும் வேளையில் குளத்தின் வால் கட்டுப்பகுதி (வட்டக்கச்சி பக்கம்) வெட்டி விடும் நிலை உருவாகலாம் எனவே மக்களே அவதானம்.என அவர் தெரிவித்துள்ளார்
