நாடு இயற்கைஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள மீட்புநிவாரண நடவடிக்கைகள் குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர்களுடனான இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உடனடி இடைக்கால நீண்டகால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்த சவாலன தருணத்தில் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மனிதாபிமான உதவிகள் உரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளன.
