இலங்கையின் அனர்த்த நிவாரண பணிகளிற்கு உதவுவதற்காக இந்தியாவிலிருந்து 80 பேர் கொண்ட குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.
76 ஆண்கள் நான்கு பெண்களுடன் இந்தியாவிலிருந்து விமானமொன்று கொழும்பை வந்தடைந்துள்ளது. இவர்களுடன் மோப்பநாய்களும் வந்துள்ளன.
மீட்பு பணிகளிற்கான சாதனங்களையும் அவர்கள் இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இலங்கையில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு துரித உதவியை வழங்கும் நோக்கில் இந்த குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
