நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சவால்களை எதிர்கொள்கிறது.
விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் பயணிகள் விமான நிலையத்திற்குச் சென்று வருவதற்கு கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை தொடர்ந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
இந்த காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்திற்குள் நெரிசலைக் குறைக்க உடன் .வருபவர்களைமுனையத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று அதிகாரிகள் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் அனைத்து செயல்பாட்டு நடவடிக்கைகளும் தடையின்றி தொடரும் என்றும் சீரான விமான அட்டவணைகள் மற்றும் பயணிகள் சேவைகளை உறுதி செய்வதாகவும் விமான நிலையம் உறுதியளித்தது