முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை’: சூறாவளி சேதத்திற்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை சாத்தியமான அனர்த்தம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தபோதிலும் மோசமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைக் குறைக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

சஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நாடாளுமன்றத்தில் பேசுகையில்இ அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால்இ ஒரு பெரிய பேரழிவைத் தவிர்த்திருக்க முடியும் என்று கூறினார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை நவம்பர் 12 அன்றே நாட்டில் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் நீரை வெளியேற்றிப் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தாமல்இநீர்த்தேக்கங்களில் உள்ள நீரை அரசாங்கம் படிப்படியாக வெளியேற்றி இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

“கடைசி நிமிடத்தில் திடீரென மதகுகளைத் திறக்கக் காத்திருக்காமல் படிப்படியாக நீரை வெளியேற்றுவதுதான் சாதாரண வழக்கம்” என்று அவர் கூறினார்.

வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை அரசாங்கம் படிப்படியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளில் 70 சதவீதத்தைத் தடுத்திருக்க முடியும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்