அது ஒரு மிகப் பெரிய ரகசியம்”.. ChatGPT-யின் வெற்றிப் பாதை குறித்து ஆல்ட்மேன் வெளியிட்ட தகவல்..!!

உலகப் புகழ் பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI-இன் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன், தங்கள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மொழியின் மாதிரிகளை உருவாக்குவதில் ஆரம்பத்தில் கண்டறிந்த சில முக்கிய விதிமுறைகள், “இனிமேல் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத ஒரு மிகப் பெரிய விஞ்ஞான அதிர்ஷ்டம்” என்று அன்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் (a16z) உடனான ஒரு உரையாடலில் கூறியுள்ளார்.

இந்த a16z நிறுவனம் OpenAI-இல் முதலீடு செய்த முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். ஆல்ட்மேனின் இந்த உரை, ஒரு மாதம் பழமையானதாக இருந்தாலும், தற்போது இது மீண்டும் வெளியாகி தொழில்நுட்ப உலகில் கவனம் ஈர்த்துள்ளது.

ChatGPT வெற்றி ஒரு திருப்புமுனை ரகசியம் :

சாம் ஆல்ட்மேன், ChatGPT சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தருணத்தை, தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உத்தியையும் மாற்றியமைத்த ஒரு மிக முக்கியமான கட்டம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்தப் பெரிய ரகசியத்தை தற்செயலாக கண்டறிந்தோம். அது ஒரு நம்ப முடியாத வெற்றியாக உணர்ந்தோம். நாங்கள் யூகிக்கும் மாதிரியின் திருப்புமுனையைக் கண்டறிந்தபோது, இதுபோல வேறு எந்தப் பெரிய கண்டுபிடிப்பும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், எங்கள் எதிர்பார்ப்புகளை மீறி, இந்த தொழில்நுட்பம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சாம் ஆல்ட்மேன், OpenAI நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு, அதன் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை மிகப் பெரிய அளவில் விரிவாக்குவதுதான் என்பதை தெளிவாக கூறியுள்ளார். இதற்காக, Foxconn, AMD, Nvidia மற்றும் Oracle போன்ற உலகத் தலை சிறந்த நிறுவனங்களுடன் இணைந்து அவர் செயல்பட்டு வருகிறார்.

நாங்கள் இப்போது, மிக தீவிரமான கட்டமைப்பு முதலீட்டை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். எங்கள் ஆராய்ச்சியின் எதிர்காலம் குறித்தும், இந்த AI மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்போகும் பொருளாதார மதிப்பு குறித்தும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

ஆனால், இவ்வளவு பெரிய அளவில் முதலீடு செய்ய, ஒட்டுமொத்த தொழில்துறையின் ஆதரவும் எங்களுக்கு தேவை என்று அவர் கூறினார். நிதிநிலை அறிக்கைகளின்படி, இந்த முக்கியமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர் (சுமார் ரூ.83 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது. இது OpenAI-இன் தற்போதைய மதிப்பான 500 பில்லியன் டாலரை விட மிகப் பெரிய தொகையாகும்.

OpenAI இன் அணுகுமுறை ஆராய்ச்சி, தயாரிப்பு, கட்டமைப்பு என்ற அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்று ஆல்ட்மேன் கூறியுள்ளார். அதாவது, சிறப்பான ஆய்வுதான் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகிறது, மேலும் அந்தக் கட்டமைப்பு மேலும் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்ய உதவுகிறது. தங்கள் நிறுவனத்தின் இறுதி இலக்கு, மக்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் தனிப்பட்ட AI சந்தா சேவையாக மாறுவதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “AI தொழில்நுட்பத்தின் எல்லைகள் நாம் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. மொழி மாதிரிகள் போதுமான அளவுக்கு முன்னேறினால், அவை ஒட்டுமொத்த OpenAI-ஐ விட சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை