முல்லைத்தீவு அனர்த்தமுகாமைத்துவப்பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்தார் – ரவிகரன் எம்.பி மின்னிணைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை விரைவில் சீர்செய்யுமாறு வலியுறுத்தினார்

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 02.12.2025இன்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கோகுல்ராஜ் அவர்களைச் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தப்பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன் முல்லைத்தீவு மின்சாரசபைக்கும் சென்று மின்னிணைப்புப் பாதிப்புக்களைச் சீர்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அனர்த்தப் பாதிப்புத் தொடர்பான விபரங்களை உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கொண்டுசென்று அந்தப் பாதிப்புக்களைச் சீர்செய்வதற்கு தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

துதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கடந்த 28.11.2025அன்று அனர்த்தம் தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன்.


அக்கூட்டத்தில் அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுதொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பின்பு கொழும்பிற்கு சென்று பாராளுமன்றத்தில் உரிய அமைச்சுக்களைச் சந்தித்து அனர்த்த நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் அனர்த்தப்பாதிப்புக்கள்தொடர்பிலும் உரிய அமைச்சுக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை சந்தித்து அனர்த்தம் தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக்கொண்டேன்.
அந்தவகையில் அனர்த்தப் பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய அமைச்சுகளுக்கும் கொண்டு சென்று அந்தப் பாதிப்புக்களை சீர்செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன். அத்தோடு மின்சார சபையினரையும் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னிணைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை விரைவில் சீர்செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தேன். விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு மின்னிணைப்புகள் சீர்செய்யப்படுமென மின்சாரசபையினராலும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தப்பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள மக்களையும் நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளேன் – என்றார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்