ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியப் பணியகத்தின் இயக்குநருமான கனி விக்னராஜா இலங்கை பல நாடுகளைப் போல பெருகிவரும் கடுமையான அனர்த்தங்களைச் சமாளிக்க தனது உள்கட்டமைப்பையும் தயார்நிலையையும் வலுப்படுத்த வேண்டும் என என தெரிவித்துள்ளார்
இந்தத் தீவு தேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தான் இதற்கு முன் பார்த்திராத அளவில் உள்ளது என்று என தெரிவித்துள்ளார்
பேரழிவான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாரிய உயிர் இழப்பு மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்னராஜா குறிப்பிட்டுள்ள அவர்போதிய தயார்நிலை இன்மையே இந்த அனர்த்தத்தின் தீவிரத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.
வெள்ள மேலாண்மை அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் “மிகவும் கடுமையான காலநிலையைத் தாங்கக்கூடிய பொருட்கள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பல நாடுகளைப் போலவேஇபெருகிவரும் கடுமையான அனர்த்தங்களைச் சமாளிக்க தனது உள்கட்டமைப்பையும் தயார்நிலையையும் வலுப்படுத்த வேண்டும். ஆனால் சில நன்கொடை வழங்கும் அரசாங்கங்கள் வெளிநாட்டு உதவிகளைக் குறைத்ததால் அண்மைய ஆண்டுகளில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சுருங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் உள்ளூரிலும் உலகளவிலும் பொது வசதிகளை வலுப்படுத்துவதற்கும் வலிமையான பிராந்திய ஒத்துழைப்பு அத்தியாவசியம் என்று விக்னராஜா வலியுறுத்தினார்.
