இயற்கை அனர்த்தம் காரணமாக 269 சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்பட்டனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது
பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் பல்கேரியாவை சேர்ந்தவர்களும் அதிகம் என தெரிவித்துள்ள சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மீள வலியுறுத்தியுள்ளது.
