ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இ;ந்திய பிரதமர் பிரதமர் மோடி ஆகியோர் டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு இப்போதுதான் நிறைவடைந்தது. வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்டங்களை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
புடின் வியாழன் அன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் மோடி அவரை வரவேற்றார் அப்போது இருவரும் அணைத்துக் கொண்டும் கைகுலுக்கியும் தங்களின் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை காலையில் இந்திய ஜனாதிபதி மாளிகையில் புடினுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த இரு தலைவர்களும் உக்ரைன் மற்றும் அமைதி குறித்துப் பேசினர். போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது “அமைதியின் பக்கமே” நிற்கிறது என்றும் மோடி மீண்டும் வலியுறுத்தினார். அதே சமயம் உக்ரைன் மோதலுக்கு “அமைதியான தீர்வை” நோக்கி ரஷ்யா செயல்பட்டு வருவதாக புடின் கூறினார்.
அவர்களது இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒரு பொருளாதாரத் திட்டத்திற்கு இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தலைவர்கள் அறிக்கைகள் வாசித்தனர்.
பெரிய அளவிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை ஆனால் கப்பல் கட்டுதல் சிவில் அணுசக்தி மற்றும் அத்தியாவசிய கனிமங்களில் முதலீடுகள் ஆகியவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அத்துடன் இந்தியாவுக்கு “தடையற்ற” எரிபொருளை வழங்குவதாகவும் ரஷ்யா கூறியது.
சந்திப்பிற்கு சற்று முன்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான திட்டத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வாஷிங்டனிடம் இருந்து ஒரு பதிலை மாஸ்கோ எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கிரெம்ளின் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கும் பின்னணியில் புடினின் இந்திய வருகை அமைந்துள்ளது. வியாழன் அன்று உக்ரைன் டோன்பாஸ் பிராந்தியத்திலிருந்து விலக வேண்டும் அல்லது அதை ரஷ்யா கைப்பற்றும் என்று புடின் மீண்டும் எச்சரித்தார்.
இந்தியாவிற்கு எரிபொருளின் “தடையற்ற ஏற்றுமதியை” தொடர ரஷ்யா தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மாஸ்கோவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்காவிடம் இருந்து டெல்லி அழுத்தம் இருந்தபோதிலும் இது நிகழ்கிறது.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை அமைக்கும் “முக்கியத் திட்டத்திற்கு” அவர்கள் உதவுவார்கள் என்றும் புடின் குறிப்பிட்டார்.