ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்

உலகின் மிகப்பெரிய கால்பந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைத்தளத்தில் எந்த அளவுக்கு பிரபலம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை. ஒவ்வொரு போஸ்ட்-க்கும் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பல பிராண்டாகளுக்கும் அம்பாசிட்டராகவும் உள்ளார்.


இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஒரு டெக் நிறுவனம் அதுவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

2022ல் துவங்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தில்கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். பெர்ப்ளெக்சிட்டி தற்போது ஏஐ துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இது சென்னை பையன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கியுள்ளார்.

பெர்ப்ளெக்சிட்டி செப்டம்பரில் திரட்டிய 200 மில்லியன் டாலர் முதலீடு மூலம் 20 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினரை அடையும் வகையில் பெர்ப்ளெக்சிட்டி ரொனால்டோ போன்ற பிரபலங்கள் உடன் கைகோர்த்து வருகிறது. இந்த ஒப்ந்தம் மூலம் ரொனால்டோ இந்நிறுவனத்தின் பயனர் அந்தஸ்திலிருந்து இப்போது முதலீட்டாளராக உயர்ந்துள்ளார்.

இந்தக் கூட்டணியின் முக்கிய அம்சமாக ரொனால்டோவுக்கான தனிப்பயன் ஏஐ உதவியாளர் “ரொனால்டோ ஹப்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது  perplexity.ai/ronaldop என்ற இணையதளத்தில் கிடைக்கும். ரசிகர்கள் இதன் மூலம் ரொனால்டோவின் தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம். இந்த ஹப்பெர்ப்ளெக்சிட்டி x CR7  என்று பிராண்ட் செய்யப்பட்டுபெர்ப்ளெக்சிட்டியின் தலைவர் மற்றும்  அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் ரொனால்டோ ஆகியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இப்புதிய கூட்டணி குறித்து பதிவிட்டு உள்ளனர்.

இந்தக் கூட்டணியை கொண்டாடடும் வகையில் பெர்ப்ளெக்சிட்டி யூடியூபில் ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. தற்போது இதுவும் டிரெண்டாகி வருகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை