தோசை சுடுவதற்காக ஜெர்மனி வேலையை கைவிட்ட இந்திய இளைஞர்!! வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ!!

தற்போது வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்கள் பலருக்குமே சுயமாக தொழில் செய்து முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவ்வாறு இருந்தாலும் குடும்ப சூழல் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த பொறுப்புகள் பெரும்பாலான இளைஞர்களை தங்களுடைய சுய தொழில் என்ற நோக்கத்தை நோக்கி செல்ல விடுவதில்லை . சில ரிஸ்க் எடுத்து சுய தொழிலில் இறங்கி வெற்றி பெற்று மற்ற அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்கள்.

அப்படி ஒரு இளைஞர் நல்ல சம்பளத்துடன் ஜெர்மனியில் தான் பார்த்து வந்த வேலையை விடுத்து தற்போது தோசை விற்பனை கடையை நடத்தி வருகிறார். இதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லை என்பது தான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான கதை . வெளிநாட்டவர்களுக்கு இந்திய உணவுகள் மீது எப்போதுமே பிரியம் அதிகம். குறிப்பாக தோசை, இட்லி போன்றவற்றை விரும்பி உண்பார்கள்.

இதனை அடிப்படையாக கொண்டு Dosamaa என்ற தோசை விற்பனை கடையை திறந்து சாதித்து காட்டியுள்ளார் மோகன், பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்களை தொடர்ந்து தற்போது புனேவில் தன்னுடைய கடையை நிறுவி இருக்கிறார். தோசாமா தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரக்கூடிய ஒரு தோசை விற்பனை பிராண்டாக மாறி வருகிறது. இதன் உரிமையாளர் மோகன் இந்தியாவை சேர்ந்த ஐடி நிபுணர்.

!மோகன் அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து ஜெர்மனிக்கு சென்றார் .அங்கே திறம்பட வேலையும் பார்த்து வந்தார் ஆனால் அந்த அதிக சம்பளம் நல்ல வேலை இவை அனைத்துமே அவருக்கு நிம்மதியை தரவில்லை . எனவே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கினார் .அப்படி அவர் தொடங்கிய நிறுவனம் தான் தோசாமா . தற்போது பாரீஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் வெற்றிகரமாக செயல்படக்கூடிய தோசை விற்பனை நிறுவனம் இது.

மோகன் இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்.அதில் நான் ஜெர்மனியில் பார்த்து வந்த நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை தோசை சுடுவதற்காக விட்டுவிட்டேன் என தொடங்குகிறார் . அதாவது நான் மோகன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். பாரீஸில் பட்டப்படிப்பை முடித்தவன், intel உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன் என கூறுகிறார்.

இறுதியாக ஜெர்மனியில் நல்ல சம்பளத்தோடு நல்ல பையனாக வேலை பார்த்து வந்தேன் அதன் பின்னர் அந்த வேலையை விடுத்து என்னுடைய சொந்த உணவகத்தை திறந்தேன் .அதுதான் தோசாமா எனக் கூறியிருக்கிறார். என்னுடைய நண்பர்களோடு இணைந்து தோசை கடையை தொடங்கினேன் .அது வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை எத்தனையோ இரவுகள் தூங்காமல் விழித்திருக்கிறேன் என கூறியிருக்கிறார் . உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் குளூட்டன் ஃப்ரீ தோசை விற்பனை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய எண்ணம் என தெரிவித்திருக்கிறார் .

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்