டித்வாபுயல் குறித்து பற்றிய தகவலை இந்திய வானிலை அவதான நிலையம்( நவம்பர் 13 அன்று இலங்கையுடன் பகிர்ந்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இந்திய வானிலை அவதான நிலையம் நவம்பர் 13 அன்று ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாவதை முதன்முதலில் கணித்தது மற்றும் நவம்பர் 20 அன்று சாத்தியமான சூறாவளி உருவாக்கம் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. நவம்பர் 23 ஆம் தேதி முதல் மூன்று மணிநேர மற்றும் ஆறு மணிநேர புதுப்பிப்புகளை வழங்கியது இது நவம்பர் 26 ஆம் தேதிக்குள் இந்த அமைப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் குறித்தது. அனைத்து தகவல்களும் வழமையான வழிகள் மூலம் இலங்கை அதிகாரிகளுடன் பகிரப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது
இந்த ஆரம்ப எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் இலங்கை பதிலளிப்பதில் மட்டுப்பாடுகளை எதிர்கொண்டது. “குறுகிய அறிவிப்பில் இலட்சக்கணக்கான மக்களை இடமாற்றம் செய்யக்கூடிய ஒரு விரிவான வெளியேற்றும் பொறிமுறையை நாடு கொண்டிருக்கவில்லை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது

. கிழக்குக் கடற்கரையின் புவியியல் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 24 மணி நேரத்தில் 400 மி.மீ என்ற அசாதாரணமாக அதிக மழைப்பொழிவுடன் இணைந்தது இது நிலச்சரிவுகள் வெள்ளம் மற்றும் கடலோர நீர் சூழ்வு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது இதனால் சூறாவளி தொடர்பான சேதங்களில் பெரும்பாலானவை ஏற்பட்டன.
தித்வா பொதுவாக சூறாவளிகளுக்கு ஆளாகாத இலங்கையின் தெற்கில் உள்ள ஒரு அசாதாரண பகுதியில் உருவானது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது
இந்தியாவைப் போலல்லாமல் இலங்கை இத்தகைய புயல்களுக்கு குறைவாகவே பழக்கப்பட்டு உள்ளது எனவே அதை சமாளிக்க குறைவாகவே தயாராக இருந்தது. சூறாவளி நிலப்பரப்பின் மீது நகர்வதற்குப் பதிலாக இலங்கைக் கடற்கரையோரம் வடக்கு நோக்கி நகர்ந்தது இது அதன் தாக்கத்தை நீடித்தது மற்றும் சேதத்தை மோசமாக்கியது.என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது
“தித்வா காற்றின் வேகத்தின் அடிப்படையில் நான்கு சூறாவளி வகைகளில் இரண்டாவது பலவீனமான வகையான ‘சூறாவளிப் புயல்’ ) என வகைப்படுத்தப்பட்டது. வரலாற்று ரீதியாக மிகக் குறைவான சூறாவளிகள் இலங்கையைப் பாதித்துள்ளன மேலும் அவற்றின் நிகழ்வு அதிர்வெண் குறைவாக உள்ளது” என்று இந்திய வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்
