முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த நிலமைகள் தொடர்பில் 11.12.2025இன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இக்கலந்துரையாடலில் பங்கேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற அனர்த்த நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அந்தவகையில் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் வீதிகள், பாலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாலும், மக்களின் வீடுகள், உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன், சீரமைப்புப்பணிகள் மேற்கொள்வதுகுறித்தும் வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், அனர்த்தமுகாமைத்துவத் திணைக்களம், பிரதேசசெயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் மாவட்டத்தின் அனர்த்தப் பாதிப்புகள் தொடர்பில் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
மேலும் இந்தக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து முல்லைத்தீவு பேருந்து நிலையம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாயாற்றுப்பாலமும் பார்வையிடப்பட்டிருந்தது.