கடந்த நவம்பர் மாதம் டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான வெள்ளங்கள் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை புயல்களின் தீவிரம் (சமீபத்தில் இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மலேசியாவையும் அழித்தவை) கடல் வெப்பநிலை உயர்வுகளால் “அதிதீவிரம்” அடைந்திருக்கலாம் என்று காலநிலை நிபுணர்கள் நம்புகின்றனர்.
இலங்கை அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இப்போது மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொண்டு வருவதற்குப் போராடி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி தீவின் நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியது மேலும் உள் பகுதிகளில் சுமார் 1200 நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் உள்கட்டமைப்புகள் மற்றும் பயிர்களை அழித்துள்ளன.
அரசின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச நன்கொடையாளர்கள் உதவிக்கு உறுதியளித்துள்ளனர் ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் அவர்களுக்கு உதவும் சிவில் சமூக குழுக்களுக்கும் நேரடி ஆதரவை வழங்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் ஏற்கனவே “நிலையற்ற வருமானம் அதிக கடன் மற்றும் பேரழிவுகளை சமாளிக்க குறைந்த திறன் உட்பட பலவீனங்களை எதிர்கொள்ளும்” சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்துள்ளது. உதாரணமாக இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் குவிந்துள்ள மலையகத் தமிழ் சமூகம் சாதாரண காலங்களிலும்கூட அடிப்படை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் போதுமான அளவில் அணுக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நீண்டகால பாகுபாடு மற்றும் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
புத்தளம் முல்லைத்தீவு மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களைக் கொண்டுள்ளன. இந்த பகுதிகளில் தமிழ் மொழி பரவலாகப் பேசப்பட்டாலும் புயல் நெருங்கும் போது உத்தியோகபூர்வ எச்சரிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை.
முந்தைய சுற்றுச்சூழல் பேரழிவுகளைப் போலவேஇஇலங்கையின் சிவில் சமூக அமைப்புகளும் பதிலளிப்பில் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. ஆனால் இந்தக் குழுக்களின் மதிப்புமிக்க பணிகளுக்கு உதவுவதற்குப் பதிலாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவற்றைக் கௌரவப்படுத்துவதற்கு மாறாக ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன மேலும் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அடக்குமுறை விதிமுறைகளுக்கு உட்படுத்துகின்றன. இதில் ஊடுருவும் மற்றும் சிரமமான அறிக்கைத் தேவைகள் சிறிய ஆவணப் பிழைகளுக்கான கடுமையான அபராதங்கள் மற்றும் நிதி பெறுவதில் தடைகள் ஆகியவை அடங்கும்.
அரசாங்கம் ஒரு அவசர நிலையை அறிவித்துள்ளது ஆனால் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முந்தைய அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டவற்றை மாதிரியாகக் கொண்ட அவசரகால விதிமுறைகள் உரிமைகளுடன் பொருந்தாத கடுமையான விதிகளைக் கொண்டுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பல சமூகங்களில் புயலின் சேதத்தை சமூக பாதிப்புகள் அதிகப்படுத்தியுள்ளன என்பதைஅதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வை காணமுயலவேண்டும் . அரசாங்கம் சிவில் சமூக அமைப்புகளை சந்தேகத்துடன் நடத்துவதற்குப் பதிலாக அவற்றுக்கு ஆதரவளித்து அதிகாரமளிக்க வேண்டும்.