இலங்கை இயற்கை அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் விரைவான மீட்சி மிகவும் அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்
விவசாய அமைப்புதெரிவித்துள்ளது.
🌾 உணவுப் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான விவசாய மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு ஆதரவு தேவை:
ஐக்கியநாடுகளின் உணவு விவசாய அமைப்பின் இலங்கை மாலைதீவுக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர சரன் “சூறாவளி இலங்கையின் பல குடும்பங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அன்புக்குரியவர்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்.”என தெரிவித்துள்ளார்

“சிறு விவசாயிகளான நெல் சாகுபடியாளர்கள் காய்கறி விவசாயிகள் மற்றும் சிறு கடற்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வயல்கள் பயிர் டுபொருட்கள் உபகரணங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் ஏற்பட்ட சேதம் இந்த முக்கிய தருணத்தில் அவர்களின் தொழில் செய்யும் திறனைத் தடுத்துள்ளது.”என அவர் தெரிவித்துள்ளார்
சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களே இலங்கையின் அரிசி காய்கறிகள் மற்றும் மீன்களில் பெரும்பகுதியை உற்பத்தி செய்கின்றனர் மேலும் கிராமப்புற குடும்பங்களின் பெரும்பகுதியினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றனர். உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவர்களின் மீட்சி அத்தியாவசியமானது.என அவர் தெரிவித்துள்ளார்
இந்த விவசாயிகள் நடப்பு பருவத்தில் மீண்டும் நடவு செய்ய முடியாவிட்டால் அல்லது வரவிருக்கும் பருவத்திற்கு முன்னதாகத் தங்கள் வயல்களைச் சீரமைக்க முடியாவிட்டால் நெல் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் 2025-க்கு அப்பால் நீட்டிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்
விவசாய அமைப்புஎச்சரித்துள்ளது
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி 108000 ஹெக்டேர் நெல் வயல்கள் 11000 ஹெக்டேர் இதர பயிர்கள் மற்றும் 6600 ஹெக்டேர் மக்காச்சோளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
“இப்போது உதவி வழங்குவது அது உறுதியான வித்தியாசத்தை ஏற்படுத்தும் போது இந்த விவசாயிகள் விரைவாக உற்பத்திக்குத் திரும்ப உதவுவதை உறுதி செய்யும்..என”ஐக்கியநாடுகளின் உணவு விவசாய அமைப்பின் இலங்கை மாலைதீவுக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர சரன் தெரிவித்துள்ளார்
.
