சீனாவிலிருந்து ஈரானிற்கு சென்றுகொண்டிருந்த கப்பலை இலங்கையின் கரையோர பகுதியில் கைப்பற்றியது அமெரிக்கா- விசேட நடவடிக்கை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

telegraph.

அமெரிக்காவின் விசேட நடவடிக்கைகளிற்கானபடைப்பிரிவு சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்த இராணுவ உபகரணங்கள் கொண்டகப்பலை கைப்பற்றியுள்ளது.

இந்த நடவடிக்கை ஈரான் ஏவுகணைகளின் எண்ணிக்கையை மீண்டும்  அதிகரிப்பதைதடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரின்போது ஈரானின் ஆயுதக் களஞ்சியம் பெருமளவில் குறைக்கப்பட்டதாக தி  வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பல் இலங்கையின் கடற்கரையில் இருந்தபோது அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழுவால் கைப்பற்றப்பட்டது. . .கைப்பற்றப்பட்ட பொருட்கள் இரட்டை பயன்பாட்டு தன்மைஉடையவை மரபுவழி ஆயுதங்களிற்கு அதனை பயன்படுத்தலாம் என அதிகாரியொருவர் தெரிவித்தார்

பாதுகாப்பு ஜனநாயகங்களுக்கான அறக்கட்டளையின் இயக்குனர் பெஹ்னம் பென் தலேப்லுவின் கூற்றுப்படி சீன நிறுவனங்கள் பெரும்பாலும் நிறமாலைமானிகள் மற்றும் சுழல்மானிகள் போன்ற அளவீட்டு சாதனங்களை ஈரானிய ஏவுகணைகளின் துல்லியத்தை மேம்படுத்த வழங்குகின்றன.

“இது இரசாயன முன்னோடிகளை விட மிகவும் ஆபத்தானது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் கப்பலில் காணப்பட்ட பொருட்கள் ஈரானின் ஏவுகணை திட்டத்திற்கான பாகங்களைப் பெறுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஈரானிய நிறுவனங்களுக்காக அனுப்பப்பட்டது என அமெரிக்காவால் திரட்டப்பட்ட உளவுத் தகவல் தெரிவிக்கிறது.

டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிக அளவில் தலையிடும் கடல்சார் மூலோபாயத்தைபின்பற்ற தொடங்கியுள்ளது . இந்த நடவடிக்கை நடந்த சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா புதன்கிழமை அன்று வெனிசுலா அருகே ஈரானுக்கு எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியது.

ஈரான் தனது சேதமடைந்த ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறது ஏனெனில் ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின்போது சுமார் 500 ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேலைத் தாக்கியது. மேலும் சுமார் 1000 ஏவுகணைகள் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான யுரேனியம் செறிவூட்டல் மற்றும் செயல்பாடுகள் மற்றும் ஈரான் மீதான ஆயுதத் தடை ஆகியவற்றை ஐ.நா. விதித்துள்ளது.

ஜனவரி 2024 இல் அமெரிக்க மத்திய கட்டளைஈரானில் தயாரிக்கப்பட்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்காக அனுப்பப்பட்ட ஏவுகணைக்கான உபகரணங்கள் அடங்கிய கப்பலைசோமாலிய கடற்கரையில் கைப்பற்றியது.

 

readmore-    https://www.tamiljobmarket.com/4960—–

வெனிசுலா எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா: ‘சர்வதேச கடல் கொள்ளை’ என்று குற்றச்சாட்டு-நடந்தது என்ன? பிபிசி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்