ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள மொத்தம் 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
புயலால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (16) நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்படவுள்ளன.இதன்படி, பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான அத்தியாவசிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரை கல்வி அமைச்சு இன்று (15) அழைத்தது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாகாணங்களிலும் உள்ள 640 பாடசாலைகளால் நாளை கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குறிப்பிட்டார்.அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் பாடசாலைச் சீருடைகள் தொடர்பில் நெகிழ்வான கொள்கை (relaxed policy) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.