தித்வா சூறாவளியைத் தொடர்ந்துகுழந்தைகள் சிறுவர்களை கடத்துதல் துஸ்பிரயோகம் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் சிலர் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் துல்லியமான எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படும்.என அவர் தெரிவித்துள்ளார்
“குழந்தைகளைக் கடத்துதல் மற்றும் சுரண்டுவதற்கான முயற்சிகளை நாங்கள் காண்கிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைச் சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்”ன அவர் ன அவர் தெரிவித்துள்ளார்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சவித்ரி போல்ராஜ் 87 குழந்தைகள் தங்கள் பெற்றோரை – ஒருவரையோ அல்லது இருவரையோ – இழந்துள்ளதாகவும் உரிய தரவுகள் தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.ன அவர் தெரிவித்துள்ளார்
