நன்றி,நாங்கள் உங்களை நேசிக்கின்றோம் நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் உண்மையான ஹீரோ”- பொன்டி கடற்கரையில் துப்பாக்கிதாரியை மடக்கி பிடித்தவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் பொதுமக்களின் செய்திகள் மலர்கள்

அவுஸ்திரேலியாவின் பொன்டிகடற்கரையில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மடக்கிபிடித்த அஹமட் அல் அஹமட்டின் வர்த்தக நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கும் செய்திகளையும் மலர்களையும் வைத்துவிட்டு செல்கின்றனர்.
பலரின் உயிரை காப்பாற்றிய அந்த நபர் குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அவரை பற்றிய ஆர்வம் அவுஸ்திரேலியாவில் அதிகரித்துள்ளது.
சதர்லாண்டில் உள்ள புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அவரது கடையின்; முன்பகுதி ஒரு நினைவுசின்னம் போல காணப்படுகின்றது


அங்கு காணப்பட்ட பெண் ஒருவர் அது அஹமட்டின் கடை எனவும் அவரது செயல் தங்களின் மனதை தொட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மிகச்சிறந்த மனிதர் அவர் எங்களுக்கு ஏதாவது தேவை என்றால் எப்போதும் உதவுவார் என தெரிவித்துள்ளார்.
அவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்னால் நன்றி,நாங்கள் உங்களை நேசிக்கின்றோம் நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் உண்மையான ஹீரோ போன்ற செய்திகளுடன் பொதுமக்கள் பூக்களை வைத்துவிட்டு செல்கின்றனர்.
நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகின்றோம் -சதர்லாண்ட் மக்கள் என்ற செய்தியும் காணப்படுகின்றது.
மக்கள் அவரின் கடைக்கு முன்னால் படம் எடுத்துகொள்கின்றனர்- அவரது வீரத்தை பற்றி பேசிக்கொள்கின்றனர்.

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்