மண்சரிவுகளில் புதைந்தவர்களின் உடல்களை மீட்க சர்வதேச நிபுணத்துவத்தை கோருமாறு அரசாங்கத்திடம் காணாமல்போனவர்கள் அலுவலகம் வலியுறுத்தல்

காணாமல்போனவர்கள் அலுவலகம் சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து மண்சரிவுகளில் புதைந்துள்ள உடல்களை மீட்பதற்கும் காணாமற்போனதாகப் பதிவு செய்யப்பட்டவர்களைக் கண்டறிவதற்கும் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அலுவலகத்தின் ஆணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தகுந்த கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு ஏதுவாக மண்சரிவுகளில் சிக்கியவர்களின் உடல் எச்சங்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச குழுக்களைக் கோருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாக காணாமல்போனவர்களின் அலுவலக ஆணையாளர் மிராக் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இயற்கைப் பேரிடர்களால் காணாமற்போகும் நபர்கள்காணாமல்போனவர்கள் அலுவலகம் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்பதைக் குறிப்பிட்ட ஆணையாளர் “காணாமற்போன மற்றும் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் டிட்வா சூறாவளியால் காணாமற்போனவர்களின் உடல்களை மீட்பதற்கான தேடலுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது” என்று கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விரைவுக் குழுவினர் காணாமற்போனவர்களின் உடல்களை மீட்பதற்காக முன்னெடுத்து வரும் மனிதாபிமான முயற்சிகளையும் திரு. ரஹீம் சுட்டிக்காட்டினார். அபுதாபி சிவில் பாதுகாப்புக் குழுவை உள்ளடக்கிய இந்த குழு கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதோடு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அவசர தங்குமிடப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வருகிறது.

இதற்கிடையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடைமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

துறைசார் தரவுகளின்படி மண்சரிவுகளில் காணாமற்போனதாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் குறைந்தது 126 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு