மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும்-பிரதமர்

அண்மைக்கால அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, மாணவர்களைப் பாதுகாப்பதற்கும், சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கமளித்ததுடன், மீளக் கட்டியெழுப்பும் செயல்முறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அவர், அறிவியல் ரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையில் அத்தகைய பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவ்வித நிதிச் சுமையும் இன்றி மீண்டும் பாடசாலைக்குச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அனர்த்தங்களுக்குப் பின்னர் குழந்தைகளின் உளநலத்தைப் பேணுவதில் பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுத்தல், சில பாடசாலைகளை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்பிரச்சினைகளுக்கான நீண்டகாலத் தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கல்வித்துறையை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தினர். அத்துடன் எதிர்கால முயற்சிகளில் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்