இரணைமடு குளத்தை பார்வையிட்டார் ஹரினி

 இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர்  ஹரினி அமரசூரிய  இன்று ( ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர்  நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுபோக மற்றும் பெரும்போக பயிர்ச்செய்கைகள் குறித்தும், விவசாயிகளின் நீர் தேவைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். அத்துடன், குளத்தை நம்பி மேற்கொள்ளப்படும் நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டார்.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது குளத்தின் பாதுகாப்பு குறித்தும், நீர் முகாமைத்துவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் அதிகாரிகளிடம் விலாவாரியாகக் கேட்டறிந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். இப்பிரச்சினைக்குத் தீர்வாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது, கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் இரணைமடு குளத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பிரதமருடன் இணைந்திருந்தனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்