CNN
பொன்டி பயங்கரவாத சந்தேக நபர்கள் கூட்டத்தின் மீது வெடிக்காத குண்டுகளை வீசினர் மற்றும்துப்பாக்கி தாக்குதலை மேற்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டனர் என்பதைஅவுஸ்திரேலிய நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தையும் மகனும், கிராமப்புறங்களில் ஒரு ரகசிய இடத்தில் துப்பாக்கி பயிற்சியில்ஈடுபட்டனர் எனநீதிபதி வெளியிட்ட உண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
நீதிமன்ற ஆவணத்தின்படி, 50 வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் ஆகியோர் துப்பாக்கிகளை ஏந்தியபடி, பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. “குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் வீடியோ முழுவதும் துப்பாக்கிகளால் சுடுவதையும், தந்திரோபாய முறையில் நகர்வதையும் காண முடிகிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
டிசம்பர் 14 அன்று பொன்டி கடற்கரையில் (Bondi Beach) ஹனுக்கா கொண்டாடிய யூத குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். சஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் பயங்கரவாதக் குற்றம் மற்றும் 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 40 கொலை முயற்சி வழக்குகளை எதிர்கொள்கிறார்.
தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இந்த இருவரும்பொதுமக்கள் மீது நான்கு வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை. அந்த மூன்று பைப் குண்டுகளும் (pipe bombs) ஒரு டென்னிஸ் பால் குண்டும் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்ததாக ஆவணம் தெரிவிக்கிறது.
மேலும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பின்புறத்தில் ஐந்தாவது வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் “மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாத சித்தாந்தத்தை” பின்பற்றுவதை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் (IS) கொடியின் முன் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், அவர்கள் சியோனிஸ்டுகளின் செயல்களைக் கண்டித்து, இந்த தாக்குதலுக்கான தங்களின் நியாயத்தை விளக்கியுள்ளனர். “குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் இந்த பயங்கரவாதத் தாக்குதலை பல மாதங்களாக நுணுக்கமாகத் திட்டமிட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று அந்த ஆவணம் மேலும் கூறுகிறது