சூறாவளியால்இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி-இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டிட்வா’ சூறாவளியால்இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய அமைச்சர் கூறுகையில் இந்த நிதியுதவியில் 350 மில்லியன் டாலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் ( concessional lines of credit) 100 மில்லியன் டாலர் மானியமாகவும் (grants. ) வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் விவரங்களை வெளியிட்ட அவர் இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறினார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் கடிதமானது பேரிடரின் போது முதல் பதிலளிப்பவர் ( first responder role ) என்ற எமது பங்கை உறுதிப்படுத்துவதுடன் இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் புனரமைப்புத் தொகுப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது. இந்த வாக்குறுதியை எவ்வளவு விரைவாகச் செயல்படுத்த முடியும் என்பதிலேயே எமது பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடியைப் போன்றே தற்போதைய இக்கட்டான காலத்திலும் இந்தியா முன்வந்து உதவுவது இயல்பானது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்