வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் III பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவுள்ள திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவே இப்பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இப்பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk
என்பதன் ஊடாகப் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
தகைமையுடைய விண்ணப்பதாரர்கள், அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பூர்த்தி செய்யப்பட்ட தமது விண்ணப்பங்களை 2026.01.16 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலதிக விவரங்களை இணையத்தளத்தின் ‘Exam and Recruitment Advertisement’ பகுதியில் பெற்றுக்கொள்ளலாம்.
