சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானா பனிச்சறுக்கு விடுதியில் இடம்பெற்றவெடிவிபத்து அதனை தொடர்ந்து ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இந்தத் தீ விபத்தில் “பல டஜன்” பேர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்புகின்றனர் – மேலும் இது குறித்து தங்களால் தற்போதைக்கு துல்லியமாக கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இத்தாலிய வெளியுறவு அமைச்சு சுவிஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி, சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாகத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களின் தீவிரம் காரணமாக, அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்று அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ்செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.